அதிக அளவில் நெரிசலைக் கொண்டு பயணிக்கிறது சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயிலேலேயே தினமுன் 1 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள் எனில், பேருந்தில் எவ்வளவு லட்சம் பேர் பயணிப்பார்கள்.
அப்போ அவர்களுக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்யனுமே? பல இடர்பாடுகளுக்கு நடுவே பறபறப்பாக இருக்கும் அவர்களை ஆசுவாசப்படுத்த ஒரு ஆப் வெளியாகவுள்ளது.
சலோ இந்தியா என்ற ஆப் டெவலிப்பிங் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகள் எங்கே இருக்கிறது, எந்த வழிகளில் செல்லும், மற்றொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு மணி நேர காலம் ஆகும், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் எது, எவ்வளவு கட்டணம் என அனைத்து தகவல்களும் இந்த செயலியில் இருக்கும்.
இந்த செயலியின் பெயர் Locate and Access My Bus ஆகும். சென்னையில் குறைந்தபட்சம் 3,500 பேருந்துகளில் இது செயல்முறைக்கு வரும்.