Mobile

ஆகஸ்ட் 12- இல் ஜியோ போன் 3 பற்றிய அறிவிப்பு!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் ஜியோ போன் 3 இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. 


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் மூன்றாம் தலைமுறை ஜியோபோன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ஜியோபோன் 3 என்கிற பெயரின் கீழ் வெளியாகும் நிறுவனத்தின் ஒரு புதிய 4G Smart feature phone ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகஸ்ட் 12- இல் ஜியோ போன் 3 பற்றிய  அறிவிப்பினை வெளியிடும் அம்பானி!

கூறப்படும் ஜியோபோன் 3 ஆனது 4ஜி ஆதரவு கொண்ட மீடியா டெக் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன்களுக்காக க்வால்காம் மற்றும் யுனிசாக் சிப்செட்களைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, அடுத்த 4ஜி பீச்சர் போன் சார்ந்த பணிக்காக Reliance Jio மற்றும் KaiOS-ன் கூட்டணியை MediaTek உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மீடியாடெக் கொண்டு இயங்கும் அந்த ரிலையன்ஸ் ஜியோபோன் ஆனது அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வணிக ரீதியாக வாங்க கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 


ஜியோபோன் 3 ஆனது, ரூ.2,999/-க்கு விற்கப்படும் ஜியோபோன் 2-ஐ விட மேம்படுத்தப்பட்ட ஒரு பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோன் 2 ஆனது 2.4 இன்ச் அளவிலான QVGA டிஸ்பிளே, 512எம்பி அளவிலான RAM மற்றும் 4ஜிபி அளவிலான ROM போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

மெமரி நீடிப்பிற்கான microSD card slot ஒன்றையும் கொண்டுள்ளது. உடன் 2MP கேமரா, டூயல் சிம் ஆதரவு,FM ரேடியோ, ப்ளூடூத், வைஃபை போன்றவைகளையும் கொண்டுள்ளது. ஒரு 2,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஜியோபோன் 2 ஆனது Facebook, WhatsApp மற்றும் YouTube போன்ற ஆப்ஸ்களை தன்னுள் கொண்டுள்ளது. 


Related posts

சீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்!!

TechNews Tamil

ரூ.47,900 அறிமுகமானது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன்!

TechNews Tamil