இந்தியாவில் முதன்மை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல் போன்ற அனைத்தையும்விட உச்சநிலை வளர்ச்சியில் உள்ளது.
கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமேசான் நிறுவனமானது மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்போம் என்று அறிவித்தது.
அதன்படி பால், மளிகை, மருந்து, சானிட்டைசர், மாஸ்க் போன்றவற்றின் விற்பனையினை மட்டும் செய்து வருகிறது. இந்தநிலையில் ‘Local Shops on Amazon’ என்ற திட்டத்தை Amazon India அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த திட்டத்தின் மூலம், அமேசான் உள்ளூர் கடைக்காரர்களுடன் இணைந்து, அவர்களினையும் முன்னேற்றும்.

மேலும் இதன்மூலம் குறைந்தது 6,000 ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுடன் இந்த திட்டத்தின்மூலம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டமானது முதற்கட்டமாக அஹமதாபாத், கோயம்புத்தூர், டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, புனே, சஹரன்பூர், மற்றும் சூரத் போன்ற நகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப் டீல் போன்றவற்றின் ஆன்லைன் விற்பனை பெரிதளவில் செயல்படாவிட்டாலும், உள்ளூர் கடை திட்டம் என்னும் Local Shops on Amazon தற்போதைக்கு செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம் உள்ளூர் விற்பனையாளர்கள் தங்கள் விற்பனையினை மேற்கொள்ள முடியும்.