ஹூவாமி நிறுவனம் அமேஸ்ஃபிட் பிப் எஸ் என்ற ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் ஜூலை 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் விளம்பரப்படுத்தும் பொருட்டு, இந்த வகை ஸ்மார்ட் வாட்ச்சுக்கான பிரத்யேக மைக்ரோசைட் ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஹூவாமி அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் 1.28 இன்ச் 176×176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் ரிஃப்ளெக்டிவ் டச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஹூவாமி அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் நோட்டிஃபிகேஷன் வசதி கொண்டதாகவும், மேலும் ஆல்வேஸ் ஆன் கலர் டச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டதாகவும், மேலும் கூடுதல் சிறப்பம்சமாக ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், டிரை ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்- டிரை ஆக்சிஸ் கைரோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஹூவாமி அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இயங்கும் வசதி, ஜிபிஎஸ் போன்றவற்றினையும், பாதுகாப்பு அம்சமாக வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது 200 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.