ட்ராய் அமைப்பு புதிய கேபிள் டிவி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, டி.டி.எச் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளில் விதிமுறைகளைப் பின்பற்றும்விதமாக மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
புதிய விதிமுறைகளுக்குப் பிறகு, ஜியோ அதிக அளவில் ஆஃபர்களை ழ்ங்கி வருகிறது, அதனால் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஏர்டெல் பல சிறப்பு ஆஃபர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது டிஷ் டிவி ஹைப்ரிட் செட்-டாப் பாக்ஸ் சேவையை துவக்கியுள்ளது. ஏர்டெல் டிஜிட்டல் டிவி எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் என்ற பெயரில் வழங்கும் இந்த சேவையினை டிஷ்டிவியும் தற்போது துவக்கியுள்ளது.

இதில் சிறப்பான விஷயம் யாதெனில், டிஷ் டிவி அமேசான் ப்ரைம் வீடியோவில் வணிக ரீதியான உறவினைக் கொண்டுள்ளதால், அமேசான் ப்ரைம் வீடியோக்களை இனி பார்க்க முடியும்.
இதன்மூலம் டிஷ் டிவி மற்ற அனைத்து நெட்வொர்க்குகளையும் அடித்து தள்ளி முன்னிலைக்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.