கேமிங் துறை தற்போது மிகப் பெரிய அளவில் உச்ச வளர்ச்சி பெற்ற ஒரு துறையாக இருந்து வருகிறது. மற்ற துறைகளைவிட, படு வேகத்தில் வளர்ச்சி பெற்ற ஒரு துறையாக இருந்து வருகிறது.
கேமிங்க் துறையில் பல நிறுவனங்கள் கால் பதித்து வெற்றி கண்டதையடுத்து, தற்போது வணிக வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகத்தில் முதல்நிலையில் இந்தியாவில் உள்ள அமேசான் நிறுவனமும் கேமிங் துறையில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது வதந்தி என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தநிலை வெகுவாக மாறி உள்ளது. அதாவது அமேசான் கேம் ஸ்டிரீமிங் சேவையின் முதல் கேமிங்கை, அறிவியல் புனைகதை சார்ந்ததாக உருவாக்கி உள்ளது.
கேம் குரூசிபில் என்னும் பெயரில் அழைக்கப்படுகிற இந்த கேமிங்க்கை குரூசியில் வெளியிடுகிறது, அத்துடன் நியூ வொர்ல்டு என்ற பெயரில் மல்டி பிளேயர் கேம் ஒன்றை வெளியிடவும் யோசித்துள்ளது.
அதாவது இந்த வீடியோ கேமிங் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களை கொண்டு அடுத்தகட்டத்தினை நோக்கிச் செல்ல அமேசான் திட்டமிட்டுள்ளது.