கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 3000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியதோடு இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உலுக்கி வருகிறது.
அதிலும் இத்தாலி சீனாவினைத் தாண்டிய அளவில் உயிர்களைப் பறிகொடுத்து வருகின்றது, இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை தீவிரமானதன் காரணமாக, இந்திய அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பால், மளிகை மற்றும் மெடிக்கல் ஸ்டோர்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அமேசான் இந்தியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
அதாவது மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களுக்கு அமேசான் முன்னுரிமை வழங்கி வருகிறது.
இந்த சேவையானது இன்று அமலுக்கு வந்துள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது, அது குறித்த விவரங்கள் அமேசான் வலைதளத்திலும் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்த அமேசானின் இந்தத் திட்டத்தினை மக்கள் பாராட்டி வருகின்றனர்.