Apps

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பெரிய அளவில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை வளர்ந்த நாடுகளிலும் சரி எவ்வித மருந்துகளும் கிடைக்கப்படாத நிலையில் ஊரடங்கினைத் தவிர இப்போதைக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப் பெறவில்லை.

ஊரடங்கினால் உலகம் முழுவதிலும் உள்ள பல நிறுவனங்களும் பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்துள்ளன. சினிமா, விளையாட்டுத் துறை என அனைத்துவகையான துறைகளும் பெரிய அளவில் வீழ்ச்சியினையே சந்தித்துள்ளன.  கொரோனா வைரஸில் இருந்து மீள்வதைவிட, பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதே பெரும் பாடாய் இருக்கும் என்று தெரிகிறது.

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

பொருளாதார வீழ்ச்ச்சியால் உலகின் பல நிறுவனங்களும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையினை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் இந்தியாவில் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கிலான பணியாளர்களை நீக்கியுள்ளது.

இந்தநிலையில் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவ அமேசான் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்க உள்ளதாக கூறியுள்ளது.

இவர்கள் நிரந்தர ஊழியர்களாகப் பணியாற்றாமல் தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது, நிலைமை சரியானதும் அவர்கள் நிரந்தர வேலை தேடிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

இண்டர்நெட் வேண்டாம்.. ஈசியா பண பரிமாற்றம் செய்ய உதவும் லாவா பே சேவை!

TechNews Tamil

ஜியோவின் Work From Home ஆஃபர்… ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா…!!

TechNews Tamil

அமேசான் ப்ரைம் தினத்தை முன்னிட்டு இவ்வளவு சலுகைகளா?

TechNews Tamil