அமேசான் இந்தியாவானது வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் வகையிலான சேவைகளை அறிமுகம் செய்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அதாவது தற்போது கொரோனா உலகெங்கிலும் தாண்டவமாடும் நிலையில் அமேசான் நிறுவனம் மிகவும் சிறப்பான ஒரு முடிவினை எடுத்துள்ளது.
அதாவது தற்போது அமேசான் இந்தியா அமேசான் பார்மசி என்னும் மருந்தக சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும் இந்த அமேசான் பார்மசியானது முதற்கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது. இது அடிப்படையிலான மருந்துகளையும் பாரம்பரிய மருந்துகளையும் விற்பனை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அமேசான் இந்த சேவையை இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தொடங்க உள்ளதாகவும், மேலும் மருந்து வணிகத்தை பெரிய அளவில் வெற்றிகரமான ஒன்றாக நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை அடுத்து இந்தியாவில் முதல் கட்டமாக 10 புதிய கிடங்குகளைத் திறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மருந்துக சேவையுடன் இந்தியாவில் மதுபானங்களை விற்பனை செய்யவும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தியாவில் அமேசான் பார்மசி சேவையானது முதலில் பெங்களூருவில் துவங்க உள்ளது.