இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களைக் கவர அவ்வப்போது ஏதாவது ஆஃபர்களை வழங்குவது வழக்கமாகும்.
அந்த வகையில் தற்போது பொருட்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர் பணம் இல்லாமல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு கடனுதவி வழங்க முடிவு எடுத்துள்ளது. அதாவது, Amazon பே லேட்டர் என்ற கடன் சேவையினை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த சேவையானது ஏற்கனவே Amazon Pay EMI என்ற ஒரு சேவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது, தற்போது பெயர் மாற்றத்துடன் இது அமேசான் பே லேட்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சேவை துவங்கி 2 வருடங்கள் ஆன நிலையில், இதன் சேவையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து ஆஃபர்களையும் வழங்கி வருகின்றது. அதாவது இந்த சேவையைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க விரும்பியான்ல் வாடிக்கையாளருக்கு கடன் வழங்கும்.

அதே மாதத்தில் பணத்தை திருப்பித் தந்தால், கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
மாத தவணைகளில் பொருட்கள் வாங்கினால், மாதத்திற்கு 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வட்டி செலுத்தலாம்.
மேலும் இத்துடன் மின்சார பில், நீர் பில், மொபைல் பில் போன்றவற்றிற்கும், அமேசான் பே லேட்டர் மூலம் பணம் செலுத்தலாம்.