Apps

100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ள அமேசான் உரிமையாளர்!!

கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 65,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியதோடு இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உலுக்கி வருகிறது.

அதிலும் இத்தாலி சீனாவினைத் தாண்டிய அளவில் உயிர்களைப் பறிகொடுத்து வருகின்றது, இந்தியாவில் 3600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை தீவிரமானதன் காரணமாக, இந்திய அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பால், மளிகை மற்றும் மெடிக்கல் ஸ்டோர்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ள அமேசான் உரிமையாளர்!!

மத்திய அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அமேசான் இந்தியா சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

அதாவது மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களுக்கு அமேசான் முன்னுரிமை வழங்கி வருகிறது.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால் வேலையினை இழக்கும் பட்சத்தில் அமேசான் நிறுவனம் வேலை தருவதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் 100 மில்லியன் டாலர் நன்கொடை அமெரிக்க உணவு வங்கிகளுக்கு வழங்கவுள்ளதாக அமேசான் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது, “நாட்டின் உணவு வங்கிகளில் முன் வரிசையில் இருப்பவர்களுக்கும், உணவுக்காக அவர்களை நம்பியிருப்பவர்களுக்கும் @FeedingAmerica க்கு 100 மில்லியன் டாலர் அளிக்க விரும்புகிறேன்” என்று பெசோஸ் கூறியுள்ளார்.

Related posts

3 நாட்களுக்கு Amazon Fab Phone Fest Sale!!

TechNews Tamil

வெறும் 10MB அளவில் ஆப்லைனில் இயங்கும் கூகுள் கேலரி ஆப் அறிமுகம்!

TechNews Tamil

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் எடுத்த முடிவு!!

TechNews Tamil