ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஆன்லைன் சாப்பிங் தளங்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியது.
அந்த வகையில் அமேசான் நிறுவனம், ஃப்ளிப்கார்ட், ஃபர்ஸ்ட் கிரை, ஸ்னேப் டீல், அர்பன் கிளப் என அனைத்து இணையதளங்களும் அவரவர் பங்கிற்கு ஆஃபர்களை வாரி இறைத்துள்ளனர். அந்த வகையில் அமேசான் ஃப்ரீடம் சேல்-ஐ அறிமுகம் செய்தது.
தற்போது அவை வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையிலும் அமேசான் மன்த் எண்டு சேல் தொடங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டால் 5000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடிக்கும் வகையில் ரூ.20,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும்விட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி அனைவரையும் கவர்ந்துள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில் ஆடை, ஆபரணங்கள், பேஷன் தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பலசரக்கு பொருட்களுக்கு 70% தள்ளுபடியும்,
அமேசானின் பிரத்யேக தயாரிப்புகளுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.