Information Technology

அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி விலையில் ஆஃபர்களை அறிவித்துள்ளது. 

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு மொபைல் நிறுவனங்கள் சலுகை விலையில், ஸ்மார்ட்போன்களை வழங்க திட்டமிட்டு வருகிறது. 

இந்த நிலையில், அமேசான் நிறுவனமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, Freedom Sale என்ற பெயரில் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி விலையில் ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே (ஆகஸ்ட் 7) ஆஃபர் வழங்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 11ம் தேதி முடிகிறது. 


அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை!

ஸ்மார்ட்போன்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரையில் தள்ளுபடியும், டிவி, மிக்ஸி, கிரேண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 60% வரையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக வாஷிங் மெஷின்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் ஆஃபரில் விற்கப்படுகிறது. எனவே, புதிதாக டிவி, வாஷிங்மெஷின் வாங்குபவர்கள் அமேசானின் சுதந்திர தின சிறப்பு விற்பனையில் வாங்கலாம். 

மேலும், ஆடை, ஆபரணங்கள் பேஷன் தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடியும், டீ தூள், எண்ணெய் போன்ற பலசரக்கு பொருட்களுக்கு 70% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டண உயர்வால் ஜியோ மீது கடுப்பில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

ஊரடங்கு உத்தரவு: பி.எஸ்.என்.எல்லைத் தொடர்ந்து இலவச சலுகைகளை வழங்கியுள்ள ஜியோ!!

TechNews Tamil

விரைவில் ஆன்லைன் ஸ்டோர்… 2021 இல் விற்பனை நிலையங்கள்… ஆப்பிளின் அடுக்கடுக்கான திட்டங்கள்!!

TechNews Tamil