அமேசான் நிறுவனம் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலை அறிவித்துள்ளது.
எப்போது தொடங்கவுள்ளது என்பது பற்றிய விவரங்கள் சில நாட்களில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விரைவில் தொடங்கும் என்று அமேசான இணையதளத்தில் உள்ள விளம்பரங்களின்மூலம் தெரியவந்துள்ளது.
தற்போதுவரையிலான தகவலின்படி, சியோமி Mi A3, சாம்சங்க் கேலக்ஸி M30, ஒன்பிளஸ் 7 Pro போன்ற ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனையாகும் என்று தெரிகிறது.

அனைத்து வகையான பொருட்களும் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிகிறது, ஆனால், அவற்றின் பெரிய அளவிலான தள்ளுபடிகளை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பெறும் என்று தெரிகிறது.
அமேசான் புதிய வெளியீடுகள், பெரிய அளவிலான கேஷ் பேக்குகள், கூடுதல் கட்டணம் இல்லாத ஈ.எம்.ஐ சலுகை, வாரண்டி போன்றவற்றில் சலுகைகள் வழங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்மார்ட்போன்களுடன் கூடுதலாக, வயர்லெஸ் இயர்போன்களையும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் இடம்பெறவுள்ளது.
டிவி, வாசிங்க் மெசின், ஃப்ரிட்ஜ் மற்றும் ஏ.சி. போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின்மீது அதிக அளவிலான தள்ளுபடிகளை அறிவிக்கும் என அந்த விளம்பரங்களில் தெரிய வந்துள்ளது.