Apps

இளைஞர்களுக்கு ஆஃபர்களை அள்ளி இறைத்த அமேசான்!

அமேசானில் நேற்று 15ம் தேதி பிரைம் டே சேல் தொடங்கி ஆஃப்பர்களை அள்ளித் தெளித்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், மூவிஸ், கிப்ட் என பல சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. இந்த சலுகை விற்பனை 17ம் தேதி வரையில் நடைபெறுகிறது. 

இதனால் அமேசானில் பிரைம் சந்தாதாரர்களாக பலர் மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 129 ரூபாய் செலுத்தினால் அமேசானில் பிரைம் வாடிக்கையாளர்களாக மாறிவிட முடியும். இது ஒரு மாத சந்தாவாகும். இதே போல், ஒரு வருட சந்தாவுக்க 999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கு ஆஃபர்களை அள்ளி இறைத்த அமேசான்!


இந்த நிலையில், இளையோர்களை குறி வைத்து பல்வேறு விதமான கேட்ஜெட்ஸ், ஃபேஷன், ஸ்மார்டபோன், ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு இளைஞர்கள் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களாக வர வேண்டும். எனவே, தற்போது இளைஞர்களை கவரும் வகையில் 18 முதல் 24 வயது உள்ளவர்களுக்கு சந்தா கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

பொதுவாக அமேசானில் ஒரு வருட சந்தா கட்டணம் 999 ரூபாய். தற்போது 18-24 வயதுக்கு உட்பட்டவர்கள் 499 ரூபாய் செலுத்தினாலே ஒரு வருடத்துக்கு அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களாக இருக்க முடியும். இந்த சலுகைகள் ஜூலை 30ம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. 

Related posts

பி.எஸ்.என்.எல்.லின் ஃபேமிலி 1199 கோம்போ பிளான்!

TechNews Tamil

இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியினை சம்பாதித்துள்ள மித்ரன் செயலி!!

TechNews Tamil

ஒரு லட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப்!!

TechNews Tamil