Apps

விதிமுறைகளுடன் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ள அமேசான், பிளிப்கார்ட் சேவைகள்!

கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 1,47800 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியதோடு இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவையும் உலுக்கி வருகிறது.

இந்தியாவில் 13835 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 452 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்திய அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது நிலைமை தீவிரமானதன் காரணமாக ஊரடங்கானது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளுடன் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ள அமேசான், பிளிப்கார்ட் சேவைகள்!

ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பால், மளிகை மற்றும் மெடிக்கல் ஸ்டோர்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தொழில்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தளர்வுகளில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட, ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆன்லைன் சேவைகள் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து துவங்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஆன்லைன் டெலிவரி செய்வதற்கு அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் முறையாக நிறுவனங்களின் முகவர்கள் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா குறித்த போலித் தகவல்கள் பரவுவதைத் தடுக்க டிக் டாக் அறிமுகப்படுத்திய புகார் வசதி!!

TechNews Tamil

அமேசான் ப்ரைம் தினத்தை முன்னிட்டு இவ்வளவு சலுகைகளா?

TechNews Tamil

ஜூம் வீடியோ கால் மூலம் மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர் அரசாங்கம்!!

TechNews Tamil