Apps

Amazon Fab Phones Fest – ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி அறிவிப்பு!

அமேசான் நிறுவனம் Amazon Fab Phones Fest என ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு விற்பனைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமேசானின் இந்த விற்பனையில் Samsung Galaxy M30 (4GB + 64GB) ஸ்மார்ட்போன் 1000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 13,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

அதே நேரம் Samsung Galaxy M20 ஸ்மார்ட்போனின் 3GB RAM + 32GB வகை, 9,990 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB வகை 11,990 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. 

Amazon Fab Phones Fest - ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி அறிவிப்பு!

அதேபோல Honor 9N 4GB/ 64GB சேமிப்பு வகை, 8,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 13,999 ரூபாயில் அறிமுகமானது. அதே போல, 17,999 ரூபாய்க்கு அறிமுகமான 4GB/ 128GB சேமிப்பு வகை 10,999 ரூபாய்க்கு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

Redmi 6 (3GB+64GB) ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. Redmi 6A (2GB+16GB) ஸ்மார்ட்போன் 6,199 ரூபாய் விலையிலும், Redmi 6 Pro (4GB+64GB) ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. 

Xiaomi Mi A2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மறுமுனையில், 6GB RAM + 128GB சேமிப்பு வகை Mi A2 ஸ்மார்ட்போன், 3,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் iPhone XR ஸ்மார்ட்போன், 58,999 ரூபாய்க்கு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

அமேசான் பார்மசி: மருந்து விற்பனைத் துறையில் கால் பதிக்க உள்ள அமேசான்!

TechNews Tamil

ஏர்டெலில் 1000ஜிபி டேட்டா இலவசம்..!!!

TechNews Tamil

அடுத்த கட்டத்தினை நோக்கிப் பயணிக்கும் Whatsapp Pay!

TechNews Tamil