Amazon Fab Phone Fest Sale ஆனது நவம்பர் 26 ஆம் தேதியான இன்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது, இந்த விற்பனை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
மேலும் இந்த விற்பனை நவம்பர் 29 தேதியன்று முடிவடைகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை ஆஃபர் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
இது தவிர ஸ்மார்ட்போன்களுக்கு கட்டணமில்லா ஈ.எம்.ஐ வசதி, எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் கிரெடிட் கார்டு டெபிட் கார்டுகளுக்கான ஆஃபர் போன்றவையும் வழங்கப்பட உள்ளது.
OnePlus, Xiaomi, Nokia, Samsung, Vivo, Huawei, Realme, Honor போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையின் போது ஆஃபர் விலையில் கிடைக்கும்.

Amazon Fab Phone Fest Sale கடந்த அக்டோபரில் பெரிய அளவில் ஆஃபர்களை வாரிக் கொடுத்தது. கடந்தமுறை OnePlus 7, OnePlus 7 Pro, Redmi 7A, Honor 20i, Vivo V15 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு 50 சதவீத தள்ளுபடியை வழங்கியது.
மேலும் இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் கவர்கள், டேட்டா கேபில்கள், சார்ஜர், ஹெட் போன், பவர் பேங்க் போன்ற அனைத்திற்கும் ஆஃபர் கிடைக்கவுள்ளது.