ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையானது விரைவில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விற்பனையின் முன்பதிவு நாளை (ஜூன் 7 ஆம் தேதி) துவங்கவுள்ளது.
அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில், இதன் விற்பனையானது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐந்து நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.3 இன்ச் 360×360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இதய துடிப்பு சென்சார், 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஜியோமேக்னெடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், GLONASS போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இது 390mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இது ஸ்மார்ட்வாட்ச் 14 ஸ்போர்ட்ஸ் மோட், MIL-STD-810G சான்று கொண்டதாக உள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.