ஹூவாமி நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e மற்றும் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e என்ற இரண்டு வகையான ஸ்மார்ட்வாட்ச்சுகளை வெளியிட்டுள்ளது. இந்த அமேஸ்ஃப்ட் ஜி.டி.எஸ் 2 மற்றும் ஜி.டி.ஆர் 2 ஸ்மார்ட்வாட்ச்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2e ஸ்மார்ட்வாட்ச் அப்சிடியன் பிளாக், ரோலண்ட் பர்பில் மற்றும் டார்க் நைட் கிரீன் போன்ற வண்ணங்களில்ம், அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e அப்சிடியன் பிளாக், டால்பின் கிரே மற்றும் ஐஸ் லேக் கிரீன் வண்ணங்களிலும் வெளியாகியுள்ளது.
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.39′ இன்ச் வட்ட AMOLED டிஸ்பிளேவினையும், மேலும் 454 x 454 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e, 1.65′ இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே 348 x 442 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் 4 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் 341 பிபி பிக்சல் அடர்த்தியினைக் கொண்டதாகவும், அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e 246 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 471 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் ஒரே சார்ஜில் 24 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை தருவதாக உள்ளது.
மேலும் இதில் பயோட்ராகர் பிபிஜி இதய துடிப்பு சென்சாரினைக் கொண்டுள்ளது. ஜி.பி.எஸ், மியூசிக் மற்றும் அழைப்புகளைப் பெறுவதற்கான ஆதரவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5.0 LE, NFC, GPS மற்றும் GLONASS போன்றவற்றினைக் கொண்டுள்ளது.