அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன் இன்று சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ளது. இந்த அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.
இந்த அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி செயலியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 32 ஜிபி உள்சேமிப்புடன் மெமரி விரிவாக்க வசதி கொண்டதாகவும் 128 ஜிபி வரை விரிவாக்கக் கூடியதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டு இருக்கும் என்று தெர்கின்றது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.