தகவல் தொடர்பு சேவை நிறுவனங்கள் பயன்படுத்தப்படும் அலைக்கற்றைக்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனால், பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.92 ஆயிரம் கோடி செலுத்த வேண்டி இருந்தது. இதில் செலுத்த வேண்டிய தொகை போக ரூ. 41 ஆயிரம் கோடி மற்றும் 1.33 லட்சம் கோடி செலுத்தப்பட வேண்டி உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தபோதும், நீதிமன்றம் நிராகரித்ததுடன், நிலுவைத் தொகையை, மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயையும், நிலுவைத் தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள்ளும் செலுத்தி விடுவேன் என்று பாரதி ஏர்டெல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பலரும், ஏர்டெல் அனைத்து வகையான பிளான்களுக்கான கட்டணத்தினை உயர்த்தும் என்று பயந்து வந்தனர். வாடிக்கையாளர்கள் பயந்தபடி ஏர்டெல் விலை உயர்வினை அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் ரூ.149 திட்டமானது, ரூ. 100 உயர்த்தப்பட்டு ரூ.249 என்ற திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மனம் நொந்து வருத்தத்தினைப் பதிவிட்டு உள்ளனர்.