Apps

JioMeet செயலிக்கு போட்டியாக ஏர்டெல்லின் ப்ளூஜீன்ஸ்!!

சமீபகாலமாக ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவி வருவதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது. இதனால் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் கால் பதிக்க ஜியோ முடிவு செய்து Jio Meet என்னும் பெயரில் வீடியோ கால் சேவையினை வெளியிட்டது. இந்த JioMeet செயலியானது இடைவிடாது 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும் என்பது போன்ற வசதிகளை வழங்கி பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றது.

JioMeet செயலிக்கு போட்டியாக ஏர்டெல்லின் ப்ளூஜீன்ஸ்!!

JioMeet செயலிக்கு போட்டியாக தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது வீடியோ கான்பிரன்சிங் செயலியான ப்ளுஜீன்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.அதாவது ஏர்டெல் நிறுவனம், வெரிசோன் நிறுவனத்துடன் இணைந்து ப்ளூஜீன்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ப்ளூஜீன்ஸ் செயலியும் துவக்க காலத்தில் இலவச சோதனை சலுகையுடன் 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக வழங்கப்படவுள்ளது. இதன் வீடியோ அழைப்புகள் AES-256 GCM என்க்ரிப்ஷன் மூலம் என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

ஏர்டெல் ப்ளூஜீன்ஸில் கூடுதலாக ஸ்மார்ட் மீட்டிங்ஸ் என்ற அம்சத்தினை வழங்கியுள்ளது. இதில் வீடியோ கான்பரன்சிங் காத்திருப்பு அறை போன்றவையும் உள்ளது.

Related posts

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரன் செயலி!!

TechNews Tamil

இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் தெரிந்துகொள்ள SBI Quick Missed Call Banking App!!

TechNews Tamil

இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் சேர்த்துள்ள இரண்டு சிறப்பு அம்சங்கள் இவைகள்தான்!!

TechNews Tamil