ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக பல ஆஃபர்களை வெளியிட்டு, தங்கள் நிறுவனத்தை முன்னிலையில் நிறுத்திவந்தது.
ஏர்டெல் ரூ.97 என்ற மலிவு விலைக்கு வழங்கிய இந்தத் திட்டமானது, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.
இந்த பிளானின் வேலிடிட்டி அளவு 14 நாட்களாகவும், தினசரிக்கு 2ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியும் இதில் வழங்கப்பட்டு வந்தது. ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா என்பதால் வணிக ரீதியாக இது சிறப்பான வரவேற்பினைப் பெற்றது.

ஆனால் இந்தப் பிளான் சிறப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏர்டெல் நிறுவனம் இந்த பிளானில் பல மாற்றங்களை செய்துள்ளது.
அதாவது இனி இந்தப் பிளான் ஆனது, 14 நாட்கள் வேலிடிட்டி உடன், அன்லிமிடெட் கால் வசதியும், நாளொன்றுக்கு 500எம்பி மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. ஜியோவுக்கு போட்டியாக அனைத்து நெட்வொர்க்குகளும் செயல்பட ஏர்டெலின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? என பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.