கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான பேஸ்புக் கூட்டு சேர்ந்தது. அதாவது, பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்கை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. அதாவது ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்கின் விலை சுமார் 43,574 கோடி ரூபாய் ஆகும்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நோக்கியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தத் தகவலானது கடந்த ஒருவாரமாக பரவிவரும் நிலையில், ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தற்போது உறுதியாகியுள்ளன.
Nokia சிஈஓ இதுகுறித்து கூறியுள்ள தகவலானது, “ஏர்டெல் உடன் நாங்கள் செய்துள்ள இந்த ஒப்பந்தமானது நிச்சயம் உலகின் முன்னணி தொலைத் தொடர்பு சந்தைகளில் ஒன்றின் எதிர்கால தகவல்தொடர்புக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும் வரக்கூடிய ஆண்டுகளில், மொபைல் போன்களைப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 100 கோடியினை எப்படியும் தொடும் என்பதால், நிச்சயம் இந்தியாவுடனான ஒப்பந்தம் எதிர்காலத்தில் உதவிகரமாக இருக்கும்.