ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர்கூட, பி.எஸ்.என்.எல் கூட தனது பழைய பிளானை தூசி தட்டி எழுப்பியது.
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.1699 பிளானை வழங்கியுள்ளது. அதாவது, 365 நாட்களுக்கு இதன் பலன்கள் கிடைக்கும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால், ரோமிங் இலவசம், தினமும் 1.4ஜிபி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சப்ஸ்கிரிப்ஷன்ஸ், விங்க் மியூசிக், போன்றவையும் இதில் அடக்கம்.

இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கவுள்ளது.
ரூ .499 என்ற ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இதன் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும்.
ரூ .299 என்ற ப்ரீபெய்ட் திட்டம் 2.5 ஜிபி டேட்டாவை தினமும் 28 நாட்கள் வழங்குகிறது.
இதனுடன் அமேசான் பிரைம் சந்தாவும் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த திட்டங்கள் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது.