ஏர்டெல் நிறுவனம், பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்சுடன் இணைந்து நாடு அதன் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்துடன் காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்கவுள்ளது.
அதாவது ரூ.599 ப்ரிபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதலாக பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியும் இனி கிடைக்கும்.

மேலும் இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும்போதும் இன்சூரன்ஸ் பாலிசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே புதுப்பிக்கப்படும்.
இது இப்போதைக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது.
இந்த இன்சூரன்ஸ் பிளான் ஆனது 18 முதல் 54 வயதுடைய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தக்கூடியது. இந்த இன்சூரன்ஸ் பிளானுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸில் பதிவு செய்யும் புதிய வாடிக்கையாளர்கள் முதலில் எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் செயலி அல்லது ஏர்டெல் விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.