ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கில், ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது வைஃபை வசதியின் மூலம் இனி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என ஏர்டெல் கூறியுள்ளது.
பலர் மனதில் இந்த திட்டத்தினைப் பற்றி எழுகிற கேள்வி யாதெனில் டேட்டா இல்லாத சமயத்தில் என்ன செய்வது என்பதுதான்.
ஆனால் டேட்டா இதற்கு தேவையில்லை என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வைஃபை வழியாக வாய்ஸ் கால்ஸ் வசதி பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், அது அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தாது.
ஆப்பிள் சீரியசில் உள்ள பல போன்கள்,
ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7 டி, ஒன்பிளஸ் 7
டி புரோ, போக்கோ எஃப் 1, ரெட்மி கே 20, ரெட்மி கே 20 ப்ரோ, சாம்சங்க் கேலக்ஸி ஜே 6, கேலக்ஸி
ஆன் 6, கேலக்ஸி எம் 30S, கேலக்ஸி ஏ 10S
போன்றவற்றிற்கு மட்டுமே பொருந்துகிறது.
வாய்ஸ் கால்கள் தரத்தில் வோல்டேவினை
விட மேம்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.