ஒவ்வொரு நெட்வொர்க்கும் அதன் கட்டணங்களை டிசம்பர் 1 முதல் உயர்த்தவுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன.
தற்போது ஏர்டெல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ரூ.100 மற்றும் ரூ.200 என்ற ரூபாய்க்கு 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்திவரும் மாதாந்திர த திட்டத்துடன் கூடுதலாக டேட்டா பெற விரும்பும்போது ரூ.100 மற்றும் ரூ.200 செலுத்தி கூடுதல் டேட்டா இந்தத் திட்டத்தின்மூலம் பெற முடியும்.
அதாவது 35 ஜிபி டேட்டா வரை கூடுதலாக டேட்டா கிடைக்கும். பணம் செலுத்தி பெற்ற அந்த 35 ஜிபி டேட்டா மீதம் இருந்தால், அந்த டேட்டா அடுத்த மாதக்கணக்கில் இணைந்துவிடும்.
இது தற்போது வாடிக்கையாளர்கள்
மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.