ஜியோ அவுட்கோயிங்க் கால் கட்டணத்தை அதிகரித்ததும் போதும், ஏர்டெல், வோடஃபோன் போன்ற மற்ற நெட்வொர்க்குகள் புதிய ஆஃபர்களை வழங்கி உள்ளன.
அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது ப்ராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபர்களை வழங்கி உள்ளது.
- ஏர்டெல் ஹைப்ரிட் செட்-டாப்-பாக்ஸ் விலை – ரூ. 3,999
ஏர்டெல் நிறுவனம் கடந்தமாதம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை அறிமுகப்படுத்தியது, இது பல வகையான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஹைப்ரிட் செட்-டாப்-பாக்ஸ் ஆகும்.

தற்போது, ஏர்டெல் வாடிக்கையாளர்களைக் கவர மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் 12 மாதங்கள் மற்றும் வரம்பற்ற ஜீ 5 போன்ற அனைத்தையும் வழங்குகிறது.
கூடுதலாக ரூ .299 செலுத்தி அனைத்து திட்டங்களையும் அன்லிமிடெடு திட்டமாக பெற முடியும்.