கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலரும் திணறி வருகின்றனர்.
இந்தக் குறையினைப் பூர்த்தி செய்ய ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத பலருக்கு ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்யும் சேவையினையும் ஜியோ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த முறையில் நமது ஏடிஎம் கார்டினைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் ரீசார்ஜ் செய்ய முடியும்.
ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஏர்டெல், எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளுடன் இணைந்து இந்த சேவையினை துவக்கியுள்ளது.
அதாவது எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பயனர்கள் ஏடிஎம்களில் தங்களுடைய ப்ரீபெய்டு எண்களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
பணம் எடுக்கும் ஆப்சனோடு, ரீசார்ஜ் செய்யும் ஆப்சனும் இருக்கும். அந்த ஆப்சனைக் க்ளிக் செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய மொபைல் எண்ணை உள்ளிட்டு ரீசார்ஜ் செய்யவும்.
ஏர்டெல்லின் இந்த சேவை தற்போது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.