ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக பல வகையான ஆஃபர்களை அவ்வப்போது அறிவித்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் ஜியோவுக்கு போட்டியாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரீசார்ஜ், வேலிடிட்டி நீட்டித்தல் எனப் பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஏர்டெல் தற்போது பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது. அதாவது கொரோனா தொற்றால் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலையில் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சியே இருந்து வருகிறது.

அதனைத் தாண்டியதாக இணையதளத்தினை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற ஆப்புகளைத் தாண்டி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதனால் மக்கள் பொழுதுபோக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனமானது ரூ.401 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 1 வருடத்திற்கு Disney சந்தா இலவசமாக வழங்குகிறது. அத்துடன் 1 வருடத்திற்கு ஹாட்ஸ்டார் விஐபி சந்தா போன்றவற்றினை வழங்குகிறது.
மேலும் இந்த ப்ளானில், 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்குப்படுகிறது. ஆனால் வாய்ஸ் கால்களை இந்தத் திட்டத்தில் மேற்கொள்ள முடியாது. அதேபோல் எஸ்எம்எஸ்களையும் அனுப்ப முடியாது.
.