சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 12,26,600 க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவைத் தாண்டி இத்தாலி, பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையினை அமலுக்குக் கொண்டுவர அறிவுறுத்தியதை அடுத்து, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான அளவில் இணைய வசதி கொடுக்கும் வகையில் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனங்களும் Work@Home என்று அழைக்கப்படுகிற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.100 மற்றும் ரூ.200 Work@Home திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
ரூ.100 மதிப்பிலான ஆட் ஆன் திட்டம்:
இது பயனர்களுக்கு 15 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.200 மதிப்பிலான ஆட்-ஆன் திட்டம்:
இது பயனர்களுக்கு சுமார் 35 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது.
ஏற்கனவே இருக்கும் திட்டங்களுடன் கூடுதலான டேட்டா தேவைப்படும்பட்சத்தில், ஏர்டெல் பயனர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் “Manage services” வழியாக இந்த ஆட் ஆன் பேக்குகளை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.