Jio Fiber மற்றும் ACT Fibernet போன்றவை வாடிக்கையாளர்களைக் கவர பல திட்டங்களை அறிவித்தநிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனமும் அதன் புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடியை வழங்குகிறது.
இந்த சலுகை முதல் கட்டமாக தற்போது பெங்களூரு மற்றும் சென்னையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய சலுகை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.
அதாவது இது ஏர்டெல் வலைத்தளம் மற்றும் மை ஏர்டெல் செயலி போன்றவற்றின்மூலம் பெறலாம். முதல் முறையாக அதனை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 799 என்ற அளவிலான பிராட்பேண்ட் திட்டம் முதல் மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த புதிய சலுகை இன்று இரவு வரை செல்லுபடியாகும் என்று அந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், இந்த இரண்டு முறைகளின் மூல ஏதோ ஒரு திட்டத்தினை தேர்ந்தெடுக்கும்போது தள்ளுபடி சலுகையானது எளிதில் கிடைக்கலாம்.
ரூ. 799 பிராட்பேண்ட் திட்டமானது 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் 150 ஜிபி டேட்டா மற்றும் Xstream content போன்றவற்றினை அன்லிமிடெட்டாக வழங்குகிறது.