ஜியோவுக்கு எதிராக ஏர்டெல் பல ஆஃபர்களை அறிவித்து வருகிறது, அந்த வகையில் அன்லிமிடட் பேக் ஒன்றினை அறிவித்துள்ளது.
அதாவது ஏர்டெலின் ரூ. 499 போஸ்பெய்ட் பேக் குறித்த சலுகைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிளானைப் பொறுத்தவரையில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அன்லிமிட்டட் அளவில் கிடைக்கும்.

இந்தப் பிளானில் ஒரு மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது, அதாவது இதன்மூலம் தினசரிக்கு 2.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதால் அமோக வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தில் அனைவரையும் கவர்ந்த அம்சம் யாதெனில், ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைம் இலவசமாக கிடைக்கும் என்பதுதான்.
அதாவது இதன்மூலம், மூன்று மாதத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் மூலம் அனைத்து வெப் சீரியஸ்களையும் பயன்படுத்த முடியும்.
இதனுடன் கூடுதலாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃபர்களும் கிடைக்கவுள்ளது.
இந்த பேக்குடன் கூடுதலாக ரூ. 749, ரூ. 999 மற்றும் ரூ. 1599 போன்ற பிளான்களுக்கும் ஆஃபர்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.