மிகவும் குறைவு விலை ஐபோனாக வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன் ஆனது எஸ்.இ மாடல் வகை போன் ஆகும்.
இதன் விலை ரூ.23,999 ஆகும். தற்போது 2020 ஆம் ஆண்டில் 23999 க்கும் குறைவான விலையில் ஐபோன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஐபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இது ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இதன் உற்பத்தி அடுத்த மாதம் துவங்க உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகலாம் என்று தெரிகிறது, இந்த ஐபோன் 8 போன்ற பல அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கலாம்.
அதாவது ஏ 13 பயோனிக் சில் மூலம் இது இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மெமரி அளவு 3 ஜிபி ரேம் வசதி கொண்டிருக்கலாம் என்றும், இது 4.7 அங்குல டிஸ்ப்ளேவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த மலிவு விலை ஐபோன் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது.