அமேசான் இந்தியா பகுதி நேர டெலிவரி வேலைக்கான அறிவிப்பை செய்திருந்தது. இதனை அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பினை அப்போது பெற்றது.
அதாவது அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையினை பகுதிநேரமாக செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.140 என்பது பலருக்கு வரப்பிரசாதமாகவே தெரிந்தது.
இருசக்கர வாகனம் மற்றும் ஆண்ட் ராய்டு மொபைல் கட்டாயம் தேவை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் தனி நபர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலையினை வழங்கி சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்கியதால் நம்பகரமானதாகக் கருதி பலரும் இதனை செய்தனர்.
அமேசான் ப்ளெக்ஸ் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கூடுதல் நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் ஃப்ளெக்ஸ் திட்டம் முதலில் அமெரிக்காவில் 2015 இல் தொடங்கப்பட்டது, அங்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையிலேயே விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியாவில் அமேசன் ஃப்ளெக்ஸ் கீழ் பணிபுரிபவர்களுக்கு குழு விபத்து காப்பீட்டின் கீழ் வருவார்கள் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது, தற்போது இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு பிஎஃப் வசதிகள் கொண்டதாக மாற்றப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.