பிஎஸ்என்எல் ஜியோவுக்கு போட்டியாக பல அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகிறது. தற்போது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
டெல்கோ ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த திருத்தி அமைத்தலில் ரூ. 106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்திற்கு தற்போது, ரூ. 186 மற்றும் ரூ.187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுக்கு கூடுதலாக தினமும் 1 ஜிபி டேட்டாவினை வழங்கவுள்ளது, அதாவது இனி ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ரூ. 153 திட்டத்தில் 1.5 ஜிபி தினசரி டேட்டா சலுகைகள் 250 நிமிட வாய்ஸ் கால் மற்றும் 100 மெசேஜ்கள் வழங்கப்படும், இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ. 118 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தினைப் பொறுத்தவரை 0.5 ஜிபி தினசரி டேட்டா, 250 நிமிட வாயிஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மெசேஜ்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைக்கு ஹரியானாவில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது.