Apps

வாட்ஸ்ஆப் இல் இணைகிறது புதிய அம்சம்!

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பை பற்றிய நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடுவதற்கு பெயர்போன WABetaInfo, தற்போது மிகவும் ஒரு புதிய வாட்ஸ்ஆப் அம்சத்தை பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது. 


WABetaInfo வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, இன்ஸ்டாகிராமில் காணப்படும் Boomerang அம்சத்தினை போன்தொரு புதிய அம்சத்தின் கீழ் வாட்ஸ்ஆப் கடந்த சில வாரங்களாக பணியாற்றி வருகிறது. 

வாட்ஸ்ஆப் இல் இணைகிறது புதிய அம்சம்!

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு குறுகிய வீடியோவை WABetaInfo பெற்றுள்ளது. அந்த வீடியோவில் இந்த அம்சத்தின் முழு செயல்பாட்டையும் பார்க்க முடிகிறதாம். அதன் அடிப்படையில், Video Type panel-ன் வழியாக அனுககிடைக்கும் இந்த புதிய அம்சமானது வீடியோக்களை GIF-களாக மாற்றும். 


வாட்ஸ்ஆப்பின் Toggle tab-ல் ஒரு புதிய பொத்தான் சேர்க்கப்படும். ஏழு வினாடிகளுக்கும் குறைவாக இருக்கும் ஒரு வீடியோவானது திறக்கப்படும் போது அது காட்சிப்படும். ஒருமுறை நீங்கள் உங்களின் வீடியோவை பூமராங் கிளிப் ஆக மாற்றியதும், அதை உங்கள் தொடர்புகளுடன் அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட்டில் ஷேர் செய்ய முடியும். 


இந்த புதிய அம்சமானது இதுவரை எதிலுமே கிடைக்கபெறவில்லை. அதாவது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான வாட்ஸ்ஆப் பீட்டாவிலும் கூட இது கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த அம்சம் கூடிய விரைவில் வாட்ஸ்ஆப்பில் தோன்ற ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகிறது. 


WABetaInfo கூற்றின்படி, இந்த புதிய பூமராங் போன்ற வாட்ஸ்ஆப் அம்சமானது முதலில் iOS பயனர்களுக்கு கிடைக்கும், பின்னரே Android பயனர்களுக்கு கிடைக்கும். 

Related posts

விளம்பரதாரர்களிடம் வசூல் செய்ய காத்திருக்கும் வாட்ஸ் அப்!

TechNews Tamil

150 நகரங்களில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ள ஸ்விக்கி!!

TechNews Tamil

டிவிக்களுக்கு அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடிகள்!!

TechNews Tamil