Apps

இந்தியாவில் 59 சீன செயலிகள் மீண்டும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்-இந்திய அரசு கடிதம்!!

இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவியது. அந்தவகையில் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட 59 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்ய, அதன்படி சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதாவது இந்திய மக்களின் தனியுரிமையினைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசு இதுகுறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அடுத்து தற்போது, தடை உத்தரவை கடுமையான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று 59 செயலிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் 59 சீன செயலிகள் மீண்டும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்-இந்திய அரசு கடிதம்!!

அதாவது இந்திய அரசு 59 செயலிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தடை உத்தரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்யப்பட்ட செயலிகள் தடையினை மீறுவது சட்ட விரோத நடவடிக்கை. மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் இந்த விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட சில செயலிகள்:

அபஸ் ப்ரவுசர், விவா வீடியோ, வீ-சேட், ஷேர்-இட், யூசி நியூஸ், யூசி ப்ரவுஸர், டிக்டாக், விஹோ வீடியோ, பிகோ லைவர், எம்ஐ ஸ்டோர், 360 செக்யூரிட்டி, டியூ பேட்டரி சேவர், டியூ ப்ரவுசர், டியூ க்ளீனர், டியூ ப்ரைவசி, க்ளீன் மாஸ்டர், ஹலோ, லைக், க்ளப் பேக்டரி, க்செண்டர், ப்யூட்டி ப்ளஸ், போட்டோ வொண்டர், நியூஸ் டாக், ஷீ இன், ரோம்வீ, க்வாய், கேச்சி க்ளியர் டியூ ஆப்ஸ் ஸ்டுடியோ, பெர்பக்ட் கார்ப், சிஎம் ப்ரவுசர், வைரஸ் க்ளீனர், எம்ஐ கம்யூனிட்டி, டியூ ரெக்கார்டர், யூகேம் மேக் அப், இஎஸ் பைல் எக்ஸ்ப்ளோரர், க்யூ க்யூ தொடர்பான செயலி, மெயில் மாஸ்டர் போன்ற செயலிகள்.

Related posts

ஜியோ பிளானை முறியடிக்க கூடுதலாக 400 எம்பி டேட்டா வழங்கும் ஏர்டெல்!

TechNews Tamil

கூகுள் நிறுவனத்தின் அசத்தலான ஆப்!!!

TechNews Tamil

Work@Home பயனர்களுக்காக 4 நாட்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ!!

TechNews Tamil