ஏசர் நிறுவனம் இந்தியாவில் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் மாடலினை வெளியிட்டு உள்ளது. இந்த ஏசர் நைட்ரோ 5 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் ஆனது 10 வது ஜெனரல் இன்டெல் கோர் செயலியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆர்பிஜி-பேக்லிட் கீபோர்ட் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 கிராபிக்ஸ் அட்டை மற்றும் 32ஜிபி டிடிஆர் 4 ரேம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

நைட்ரோ 5 லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதி மற்றும் இதர்நெட் இ2600 எம்யூ-எம்ஐஎம்ஓ தொழில்நுட்பம் இன்டெல் வயர்லெஸ் வைஃபை கொண்டதாக உள்ளது.
மேலும் இது இணைப்பு ஆதரவாக வைஃபை 6, ப்ளூடூத் 5, யூஎஸ்பி ஜென் 2 போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த கேமிங் லேப்டாப் ஆனது 1.6 மிமீ பயன தூரத்தை கொண்டதாகவும், நைட்ரோ ஏச்ர் கூல்பூஸ்ட் தொழில்நுட்பத்தை கொண்டதாகவும் உள்ளது.
மேலும் ஏசர் கேமிங் லேப்டாப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நைட்ரோசென்ஸ் மூலம் பயனர்கள் கண்காணிப்பு அம்சத்தை வழங்குகின்றது.