Information Technology

மண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினால் துளசி செடியாக வளரும் விசிட்டிங்க் கார்டு..

இந்திய அரசாங்கத்தின் வன சேவை அதிகாரி பிரவீன் கஸ்வான் கொடுக்கும் விசிட்டிங்க் கார்டினை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசிச் செடி வளர்வதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இவரின் ட்விட்டர் பதிவிற்கே பல கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர், சமீபத்தில் இவர் தமிழகத்தின் நீலகிரியில் பள்ளத்தில் சிக்கிய கரடியை மீட்கும் வீடியோ வெளியிட்டு அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றார்.

அந்த வகையில் தற்போது அவர் ஒரு விசிட்டிங் கார்டின் புகைப்படத்தை டிவிட்டர் பதிவிட்டு உள்ளார், காகித அட்டையிலான அந்த விசிட்டிங்க் கார்டில் முகவரி விபரங்கள், போன் விபரங்கள், பெயர் மற்றும் இமெயில் ஐடி உள்ளது.

மண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினால் துளசி செடியாக வளரும் விசிட்டிங்க் கார்டு..

மேலும் இந்த கார்டை மண்ணில் நடும்போது துளசி செடியாக வளரும் என்று அச்சிடப்பட்டுள்ளது. அதாவது காகித அட்டையின் நடுவே துளசி விதைகள் வைக்கப்பட்டுள்ளதால், இந்த விசிட்டிங்க் கார்டினை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசிச் செடியாக வளரும்.

கஸ்வானின் இந்த விசிட்டிங்க் கார்டானாது ட்விட்டர் வாசிகள் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும், கமெண்ட்டுகள் செய்யப்பட்டும் வருகின்றது.

Related posts

அனைத்து பயனர்களுக்கும் இலவச இணைய சேவை… பிஐபி விளக்கம்!!

TechNews Tamil

அம்மாடியோ.. விதிமுறைகளுடன் துவங்கியது ஓலா, ஊபெர் சேவைகள்!!

TechNews Tamil

கிருமிகள்மீது மருந்து தெளிக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரூ.1000 மதிப்பிலான இயந்திரம்!!

TechNews Tamil