பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.
இந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி இதனைத் தடை செய்தது.

ஆனாலும் இளைஞர்களை இதன் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை, இந்த நிலையில் சமீபத்தில் புதிய இடங்கள், புதிய சாலைகள் மற்றும் புதிய வளங்கள் போன்றவற்றுடன் மிராடோ என்ற புதிய காரும் அத்துடன் புதிய ரேஸ் டிராக் சேர்க்கப்பட்டு பப்ஜி கேம் ஆனது 0.18.0 அப்டேட்டுடன் வெளியிடப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தனது தாய், தந்தையரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 17 லட்சம் ரூபாயை (22,763.96 டாலர்) பப்ஜி மொபைலில் செலவிட்டுள்ளார்.
அதாவது தனது பப்ஜி மொபைல் அக்கவுண்ட்டினையும், தனது நண்பர்களின் அக்கவுண்ட்டினையும் அப்கிரேடு செய்ய எண்ணி இவ்வாறு செலவு செய்துள்ளார். இந்ததொகையானது அவரது தந்தையின் மருத்துவ செலவிற்காக சேமிக்கப்பட்ட தொகை என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.