ஓவல், வட்டம் என பல்வேறு டிசைன்களில் இறக்கை இல்லாத ஃபேன் கிடைக்கிறது. இதில் இறக்கைகள் இல்லை என்பதால், குழந்தைகள் கை இறக்கையில் பட்டு விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
இதற்கு அடுத்ததாக ஓவல் வடிவத்தில் இருக்கும் ஓவல் பிராண்டு ஃபேன். இதன் விலை 6,200 ரூபாயாகும். இதற்கு இரண்டு வருடம் வாரண்டி வழங்கப்படுகிறது.
40 வாட் மின்சக்தியில் இயங்கக்கூடியது. பேனை இயக்குவதற்கு பிரத்யேகமாக ரிமோட்டும் கூடவே வழங்கப்படுகிறது.. தொடர்ந்து 7.5 மணி நேரம் வரையில் இயங்கும்.

வீட்டில் மெயின் ஹால், கிச்சன், டைனிங், ஓய்வு அறை என எங்கு வேண்டுமானாலும் விசிறி இல்லா ஃபேனை பயன்படுத்தலாம். இறக்கைகள் இல்லை என்பதால், அதிகமான சத்தம் எதுவும் எழுப்பாது. மேலும், ஃபேனில் நான்கு லைட் பொருத்தப்பட்டுள்ளது.
நமது எண்ணங்களுக்கு ஏற்ப எந்த கலர் லைட் வேண்டுமோ அதை ஆன் செய்யலாம். இதே போல், டைமர் வசதியும் இதில் உள்ளது. இரவு தூங்கும் போது இரண்டு மணி நேரம் மட்டும் பேன் ஒடினால் போதும் என்றால், டைமர் பயன்படுத்தி அதற்கு ஏற்ப செட் செய்து கொள்ளமுடியும்.
வைஃபை மற்றும் ப்ளுடூத் மூலம் இயங்கும் விசிறி இல்லா ஃபேனும் ஆன்லைனில் கிடைக்கிறது. இதன் மூலம் மொபைல் உள்ள வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்தி பேனை இயக்கலாம்.