ரெட்மி நிறுவனம் சீனாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த 98 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. 98 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் மாடலின் இந்திய விலை – ரூ.2,15,400
ரெட்மி நிறுவனத்தின் புதிய 98 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியானது பேட்ச்வால் யுஐ ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த 98 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியானது மேக்ஸ் 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் டி972 குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியானது மேக்ஸ் ஆடியோ வசதி, டால்பி, டிடிஎஸ், போன்ற 4 பெரிய ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவியானது வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 4.2, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ் /பி.டி.ஐ.எஃப் மற்றும் ஈதர்நெட் போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.