தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் பிரதமர் மோடி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் டிவி பார்ப்பது, இணையத்தினை பயன்படுத்துவது எனப் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
டிவி பார்ப்போரைவிட, இணையத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்பின் பயன்பாடானது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
டிவி பார்ப்பது, வீட்டில் உள்ளோரிடம் உரையாடுவது, ரேடியோ கேட்பது, புத்தகம் படிப்பது என இருந்துவந்தாலும் தற்போதைய புள்ளி விவரக் கணக்கெடுப்பின்படி, வாட்ஸ் ஆப் மட்டுமல்லாது மற்ற சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடும் தற்போது ஏறுமுகத்தில் வேறு லெவலாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும் கடந்த வாரத்தை விட தற்போது 87 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் work from home பார்ப்போர் இணையதளத்தின் வேகம் குறைந்திருப்பதாக புகார் கூறி வருகின்றனர்.