Information Technology

இன்றோடு ஓய்வு பெற்ற 78,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள்!!

பிஎஸ்என்எல் அதிக அளவில் நஷ்டத்தினை சம்பாதித்து வருவதால், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிவித்தது.

விருப்ப ஓய்வு திட்டத்தின்படி ஓய்வு பெறுவோருக்கு, சில சலுகைகளையும் இந்த நிறுவனம் தற்போது அளித்துள்ளது.

அதாவது பணி ஓய்வு காலம் வரையிலான காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்களும், பணி நிறைவு செய்தபின்னர் ஆண்டுக்கு 35 நாட்களும் ஊதியம் வழங்கப்படும்.

 குறைந்த பட்சம் 80,000 பேர் இதன்மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நினைத்ததைப் போல் சுமார் 75,000 ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்தனர்.

இன்றோடு ஓய்வு பெற்ற 78,000  பிஎஸ்என்எல் ஊழியர்கள்!!

தற்போது பிஎஸ்என்எல் ஊழியர்கள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இதன்மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் குறையும் என்று தெரிகிறது.

ஏர்டெல், வோடபோன், ஏர்செல், ஐடியா போன்ற நெட்வொர்க்குகள் போன்று பிஎஸ்என்எல்லும் தற்போது நவீனமாக மாறும் முயற்சியினை எடுத்து வருகிறது.

Related posts

மலிவு விலையில் வோடபோன் அறிமுகம் செய்த 2 திட்டங்கள்!!

TechNews Tamil

3 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிளானை நீட்டிப்பு.!

TechNews Tamil

இந்தியாவில் பல லட்சக்கணக்கிலான பான் கார்டுகள் செயலிழக்கலாம்…!!

TechNews Tamil