பிஎஸ்என்எல் அதிக அளவில் நஷ்டத்தினை சம்பாதித்து வருவதால், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிவித்துள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தின்படி ஓய்வு பெறுவோருக்கு, சில சலுகைகளையும் இந்த நிறுவனம் தற்போது அளித்துள்ளது
இதுபற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பி.கே. புர்வார், கூறியதாவது, “பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலரும் இந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பணி ஓய்வு காலம் வரையிலான காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்களும், பணி நிறைவு செய்தபின்னர் ஆண்டுக்கு 35 நாட்களும் ஊதியம் வழங்கப்படும்.
இதுகுறித்து ஆழ்ந்து கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். குறைந்த பட்சம் 80,000 பேர் இதன்மூலம் பயனடைவார்கள்.
இதன்மூலம் நிறுவனமும் நஷ்டத்தில் இருந்து ஓரளவு தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறினார்.
இந்த புதிய திட்டம் ஜனவரி 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முன்பதிவும் துவங்கிவிட்டது.
நினைத்ததைப் போல் தற்போதுவரை சுமார் 75,000 ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.