வோடபோன் நிறுவனம் அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 209 விலையில் ஒரு புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக வோடபோன் நிறுவனம் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது. அதன்படி இதன் வேலிடிட்டி ஏழு நாட்கள் என்பதால், மொத்தம் 7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
டேட்டாவுடன் கூடுதலாக, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். ஆகியவையும் வழங்கப்படுகிறது.

வோடபோன் நிறுவனம் ரூ.250 க்கு கீழ் ரூ. 169, ரூ. 199, ரூ. 209 மற்றும் ரூ. 229 என நான்கு விலைகளில் 4 பிளான்களை அறிவித்துள்ளது.
மேலும் ஏர்டெல் நிறுவனமானது ரூ. 250 க்கு கீழ் ரூ. 169, ரூ. 199 மற்றும் ரூ. 249 ஆகிய விலைகளில் 3 பிளான்களை அறிவித்துள்ளது.