சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனை சமீபத்தில் துவக்கியது, இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1. சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.66,999
சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது 563ppi பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்ற மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 10எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி கொண்டதாகவும் உள்ளது, மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்டதாகவும் உள்ளது.
இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, போன்றவற்றினைக் கொண்டுள்ளது.